பார்வையற்றவர்களுக்கு சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்
பார்வையற்றவர்களுக்கு சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்
UPDATED : செப் 07, 2011 12:00 AM
ADDED : செப் 07, 2011 10:53 AM
பேரவையில் சமூக மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் செல்வி ராமஜெயம் இதனைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், பார்வையற்ற பிளஸ் 1, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு பேசும் மென்பொருளான ஜாஸ் சாப்ட்வேரை ரூ.44 லட்சம் செலவில் வாங்கி லேப்டாப்புடன் வழங்கப்படும். இந்த ஆண்டு மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் 560 பேருக்கு லேப் டாப் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதேப்போல, நடப்பு நிதியாண்டு முதல் கல்வி பயிலும் மாற்றும் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் பயனடையும் வகையில் பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 ஸ்கூட்டர்கள் ரூ.2 கோடி செலவில் வாங்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
