தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வேலை நேரம் அதிகரிப்பு

பள்ளி வேலை நேரம் அதிகரிப்பு

பள்ளி வேலை நேரம் அதிகரிப்பு


UPDATED : செப் 15, 2011 12:00 AM

ADDED : செப் 15, 2011 05:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2011 12:00 AM ADDED : செப் 15, 2011 05:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் பாடத் திட்டப் பிரச்சினையால் புத்தகங்கள் இல்லாமல் இரண்டரை மாதம் வரை பாடம் நடத்தாமல் இருந்ததால் அதனை சரிகட்டும் வகையில் பள்ளி வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை பாடம் நடத்தப்படாமல் இருந்ததால், வரும் காலாண்டு தேர்விற்குள் அதற்கான பாடங்களை முடிக்க ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பள்ளி செயல்படும் நேரத்தை அதிகரித்தும், சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக காலை 9.30 மணிக்குத் துவங்கி மாலையில் 4 மணி வரை பள்ளிகள் இயங்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை விடப்படும். ஆனால் தற்போது பள்ளி நேரத்தை 35 நிமிடம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இனி பள்ளிகள் காலை 9.30 மணி முதல் 4.35 மணி வரை நடைபெறும். மாதத்தில் 2 சனிக்கிழமைகள் பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us