UPDATED : செப் 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலையில் பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) செப்., 4ம் தேதி ஆய்வு நடத்தியது.
11வது ஐந்தாண்டு திட்டத்தில் பல்கலை மேம்பாட்டுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென யு.ஜி.சி.,யிடம் பாரதியார் பல்கலைக்கழகம் கோரிய. இதை பரிசீலித்த யு.ஜி.சி., டில்லி ஜவகர்லால் பல்கலை முன்னாள் பேராசிரியர் கவுசிக் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை, பாரதியார் பல்கலையில் ஆய்வு நடத்த அனுப்பி வைத்தது.
இக்குழு, பல்கலையில் ஆய்வு நடத்தியது. பல்கலையின் தேவை பற்றிய அறிக்கையை துணைவேந்தர் திருவாசகம், குழுவிடம் சமர்ப்பித்தார். நிதி தேவை பற்றி பல்கலையில் உள்ள 34 துறைத்தலைவர்கள், குழுவிடம் எடுத்துரைத்தனர்.
இக்குழுவினர், இரு குழுவாக பிரிந்து எட்டு துறைகளில் ஆய்வு நடத்தினர். 10வது ஐந்தாண்டு திட்டத்தில் பெறப்பட்ட நிதி, எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தனர். 6ம் தேதி வரை ஆய்வு நடக்கிறது.

