UPDATED : செப் 23, 2011 12:00 AM
ADDED : செப் 23, 2011 10:00 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : "தேர்வு முடிவுகளை அறிவிப்பது புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் கடமை" என, அரியூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்லூரியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், முதலாமாண்டு தேர்வு முடிவுகளை, புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிக்காததால், மாணவர்கள், இரண்டாமாண்டிற்கு செல்ல முடியாமல் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை அறிவிப்பது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கடமை. "மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு கல்லூரி நிர்வாகம் தூண்டிவிட்டுள்ளது என்பது தவறான செய்தியாகும்" என கூறப்பட்டுள்ளது.
