ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முக்கியத்துவம்-ஐஐடி புதிய இயக்குநர்
ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முக்கியத்துவம்-ஐஐடி புதிய இயக்குநர்
UPDATED : செப் 24, 2011 12:00 AM
ADDED : செப் 24, 2011 02:34 PM
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பேசுகையில், சென்னை ஐஐடியில் அப்படை ஆராய்ச்சி மட்டுமல்லாமல் பயன்பாடு துறையிலான ஆராய்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஆராய்ச்சி என அனைத்து வகையான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார். இப்போது சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 5500 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை அடுத்த 2 ஆண்டுகளில் 8,000ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல ஆசிரியர் எண்ணிக்கையும் 475ல் இருந்து 600 ஆக உயர்த்தப்படும். ஐஐடி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுடன் தோழமையுடன் பழகுவது நல்லது. அவரவர் அறைகளை மூடிக் கொண்டு கணினியில் மூழ்குவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களின் மனதை திடப்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்களை ஐஐடி வகுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
