UPDATED : செப் 24, 2011 12:00 AM
ADDED : செப் 24, 2011 03:47 PM
இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.க்களில் உலத்தரத்திலான தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வள்ளலார் நகர் அரசு ஐ.டி.ஐ.யில் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் பயிற்சியும், அம்பத்தூரில் ஆட்டோமொபைல் பயிற்சியும், கிண்டி மகளிர் ஐடிஐயில் பேஷன் டிசைனிங் பயிற்சியும், வேலூரில் லெதர் குட்ஸ் மற்றும் புட்வேர் மேக்கர் பயிற்சியும், கிண்டியில் கேட்டரிங் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியும், செங்கல்பட்டில் புரடக்ஷன் மற்றும் மேனுபேக்சரிங் பயிற்சியும் பெறலாம். தனியார் பயிற்சி நிறுவனங்களில் இதுபோன்ற பயிற்சிகளை படிப்பதற்கு பல லட்சம் செலவாகும். ஆனால் அரசு ஐ.டி.ஐ.களில் இவை அனைத்தும் இலசமாக வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் தகுதியான மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை, இலவச சீருடை, காலணி, பஸ் பாஸ், ரயில் கட்டணத்தில் சலுகை ஆகியவையும் வழங்கப்படும். பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. ஆண்கள் 14 வயது முதல் 45 வயது வரை இப்பயிற்சியில் சேரலாம். மேற்கண்ட தொழிற்படிப்புகளில் பல்வேறு இடங்கள் காலியாக இருக்கின்றன. இவை செப்டம்பர் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.
