UPDATED : செப் 27, 2011 12:00 AM
ADDED : செப் 27, 2011 01:53 PM
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, கல்வி நிறுவனம், மருத்துவ துறையில், டிப்ளமோ, முதுநிலை மருத்துவம் மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:
1. டி,எம்/எம்.சிஎச்.,(மூன்று ஆண்டு) இதில் கார்டியாலஜி, நியூராலஜி, நியூரோ இமேஜிங், வாஸ்குலர் சர்ஜரி மற்றும் நியூரோ சர்ஜரி போன்ற பல்வேறு படிப்புகளுக்கும்
2. ஐந்து ஆண்டு எம்.சிஎச்., நியூராலஜி படிப்பிற்கும்
3. ஒரு ஆண்டு முதுநிலை மருத்துவத்தில் நியூரோ அனஸ்தீசியா, கார்டியோ வாஸ்குலர் மற்றும் நியூரோ ரேடியாலஜி படிப்புகளுக்கும்
4. ஒரு ஆண்டு முதுநிலை அறிவியல் பெல்லோசிப், கார்டியாலஜி, பீடியாட்ரிக் கார்டியலஜி, நியூரோ மற்றும் வாஸ்குலர் சர்ஜரி போன்ற பல்வேறு படிப்புகளுக்கும்
5.பயாலஜிக்கல் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, செல் பயாலஜி மற்றும் நியூரோ சயின்ஸ் போன்ற பல்வேறு வகையான படிப்புகளுக்கும் 6.இரண்டு ஆண்டு மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் படிப்பிற்கும்
7.இரண்டு ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கும்
8.இரண்டு ஆண்டு மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்ப கட்டணம்: ஒன்று முதல் நான்கு வரையிலான படிப்புகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய், ஐந்து மற்றும் ஆறாம் படிப்புகளுக்கு ஆயிரம் ரூபாய், ஏழு மற்றும் எட்டாம் படிப்புகளுக்கு முந்நூறு ரூபாய். விண்ணப்ப படிவத்தை பல்கலை இணைய தளத்தில் டவுண்லோடு செய்து அத்துடன் நீங்கள் தேர்வு செய்த படிப்பிற்கான விண்ணப்பக் கட்டணத்தை டி.டி.,யாக எடுத்து அக்.7க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.sctimst.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
