தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : விடுமுறை குறையும்

ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : விடுமுறை குறையும்

ஏப்ரலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : விடுமுறை குறையும்


UPDATED : அக் 07, 2011 12:00 AM

ADDED : அக் 07, 2011 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2011 12:00 AM ADDED : அக் 07, 2011 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கல்வியாண்டில், சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமத நாட்களை, சமச்சீர் இடைவெளி என, பள்ளிக் கல்வித் துறை குறிப்பிடுகிறது. புத்தகங்கள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, மொத்தம் உள்ள, 183 கற்பிக்கும் நாட்களில், 60 நாட்கள் வகுப்பறைகளில் பாடம் நடக்கவில்லை.

காலாண்டு விடுமுறை நாள் எண்ணிக்கையை குறைப்பதன் மூலமும், சனிக்கிழமையன்று வகுப்பு நடத்துவதன் மூலமும், வகுப்பறை நேரத்தில், 35 நிமிடங்கள் அதிகரித்துள்ளதன் மூலமும், 60 நாள் சமச்சீர் இடைவெளியை ஓரளவு ஈடுகட்ட, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைந்த நாட்களே உள்ளதால், 10ம் வகுப்புக்கு காலாண்டில், 30 சதவீதமும், அரையாண்டில், 50 சதவீதமும், பொதுத் தேர்வில், 20 சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சமச்சீர் இடைவெளியால் பிற வகுப்புகளை விட, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தான், அதிக பாதிப்பை சந்திப்பர்.

சமச்சீர் இடைவெளியும், பாட சதவீதமும் குறைக்கப்பட்டுள்ள போதும், பொதுத் தேர்வை வழக்கமான தேதியில் நடத்த தயங்குகிறது கல்வித்துறை.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள நடப்புக் கல்வியாண்டுக்கான காலண்டரில், "கற்பித்தல் நாட்கள் குறைவாக உள்ளதால், வழக்கமாக, மார்ச் நான்காம் வாரம் நடைபெறும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், இந்த முறை, 2012 ஏப்ரல் முதல் வாரம் நடத்தப்படலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்த முறை, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கமாக நடைபெறும் மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பில்லை என, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு, ஆசிரியர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி அளித்தாலும், கோடை விடுமுறை நாட்கள், 10 நாட்கள் குறைவது கவலை அளிக்காமல் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us