அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
UPDATED : அக் 11, 2011 12:00 AM
ADDED : அக் 11, 2011 09:53 AM
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, கட்டணத்தை மாற்றி அமைக்கக் கோரிய, 6,500 பள்ளிகளுக்கு, புதியக் கட்டணத்தை நிர்ணயித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அப்போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கவில்லை. மேலும், பல்வேறு பள்ளிகள், கட்டண நிர்ணயிப்பு வரம்பிற்குள் வராமல் விடுபட்டிருந்தன.
இந்த பள்ளிகளுக்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்கு, குழுவின் தற்போதைய தலைவர் சிங்காரவேலு நடவடிக்கை எடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து, பள்ளிகளின் வரவு-செலவு கணக்கு விவரங்களை, சிங்காரவேலு கேட்டு வருகிறார். அதன்படி, 2,200 பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
குழுத் தலைவர் சிங்காரவேலு கூறும்போது, "குழு ஏற்கனவே நிர்ணயித்த கட்டணங்களை விட, பள்ளி நிர்வாகங்கள் அதிகக் கட்டணம் வசூலித்தால், அது குறித்து, பெற்றோர், எங்கள் குழுவிடம் புகார் தரலாம். சம்பந்தபட்ட பள்ளிகள் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
