தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச வினா-விடை புத்தகம் வழங்கும் விழா

இலவச வினா-விடை புத்தகம் வழங்கும் விழா

இலவச வினா-விடை புத்தகம் வழங்கும் விழா


UPDATED : அக் 17, 2011 12:00 AM

ADDED : அக் 17, 2011 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2011 12:00 AM ADDED : அக் 17, 2011 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: சென்னை அணுமின் நிலையம் சார்பில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இலவச வினா-விடை புத்தகம் வழங்கும் விழா நடந்தது.

கல்பாக்கம் நகரியம், இந்திய அணுமின் கழக விருந்தினர் மாளிகையில் நடந்த விழாவிற்கு, சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாணவ, மாணவியருக்கு இலவசப் புத்தகங்களை வழங்கி பேசும்போது, "அணுமின் நிலையம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமப் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியரின் நலனில், நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். கல்பாக்கம் நகரியப் பள்ளிகளில் உள்ள வசதிகளை, கிராமப் பள்ளிகளிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுற்றுப்புற கிராமப் பள்ளிகளில் பிளஸ் 2 படிப்பவர்கள், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இலவச வினா-விடை புத்தகம் வழங்குகிறோம்" என்றார்.

அணுமின் நிலைய கிராம நலக்குழுத் தலைவர் சுரேஷ் வரவேற்று பேசும்போது, "சூராடிமங்கலம் பள்ளியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் கட்டுகிறோம். அதேபோல் சுற்றுப்புற கிராமப் பள்ளிகளில், இரண்டு ஆண்டுகளில் அறிவியல் ஆய்வகம் கட்டப்படும்" என்றார்.

விழாவில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், மணமை, மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 526 மாணவ, மாணவியருக்கு வினா-விடை புத்தகம், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 2 ஆயிரத்து 446 பேருக்கு ஜியாமெட்ரி பெட்டி வழங்கப்பட்டது. முதன்மை கண்காணிப்பாளர் ராஜ்புத், மனிதவள பொதுமேலாளர் தனசேகரன், முதுநிலை மேலாளர் பி.கே.சிங் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us