UPDATED : அக் 17, 2011 12:00 AM
ADDED : அக் 17, 2011 04:55 PM
உணவு விடுதிகளில் வரவேற்பாளர், விடுதி பராமரிப்பாளர், உணவு,பானங்கள் பரிமாறல், சமையல் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற விரும்புவர்களுக்காக ஓபராய் குரூப் நிறுவனம் ஸ்டெப் எனப்படும் மூன்றாண்டு கால பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியில் சேர பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கல்விக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை; மாறாக, ஊக்கத்தொகையாக 3,500 ரூபாயை ஓபராய் நிறுவனம் வழங்குகிறது. ஓபராய் குழும ஓட்டல்களிலேயே இதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம். சென்னையைப் பொருத்தவரை, டிரிடென்ட் ஓட்டலில் பயிற்சி வழங்கப்படுகிறது. மூன்றாண்டுகள் நிறைவில் BTS எனப்படும் இளநிலை சுற்றுலாப்படிப்புகள் எனும் பட்டத்தை வழங்குகிறது. சிறப்பான நிலையில் தேர்ச்சி பெறுபவர்கள் ஓபராய் குழுமத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.oberoigroup.com என்ற இணையபக்கத்தை அணுகலாம்.
