sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘உலகத்தர பல்கலையில் அரசு தலையீடு கூடாது’

‘உலகத்தர பல்கலையில் அரசு தலையீடு கூடாது’

‘உலகத்தர பல்கலையில் அரசு தலையீடு கூடாது’


UPDATED : செப் 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
இந்தியாவில் அமையவிருக்கும் உலக தரத்திலான 14 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் அரசு தலையீடு இருக்ககூடாது என தேசிய அறிவுசார் கழகம் பரிந்துரை செய்துள்ளது.
உலக தரத்திலான மத்திய பல்கலைக்கழகங்கள் புனே, கோல்கட்டா, கோயமுத்தூர், மைசூர், விசாகப்பட்டினம், காந்திநகர், ஜெய்ப்பூர், பாட்னா, போபால், கொச்சி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், கவுகாத்தி, நொய்டா ஆகிய இடங்களில் அமையவிருக்கிறது.
இந்த பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனத்தில் அரசு தலையிடக்கூடாது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து, பல்கலை நிர்வாகமே கட்டணங்களை நிர்ணயித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தேசிய அறிவுசார் கமிஷன், பல்கலைக்கழக மான்ய குழுவிற்கு சமீபத்தில் பரிந்துரை செய்து இருந்தது.
இதுதொடர்பாக யு.ஜி.சி.,க்கு தேசிய அறிவுசார் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அமைய விருக்கும் 14 பல்கலைக்கழகங்களின் செயல்பாடு குறித்து வரைவு அறிக்கை தயாரித்து, அவைகள்  தன்னாட்சி அதிகாரத்துடன் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயிப்பது, தொழில்துறை மற்றும் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு அதிகாரம் அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அறிவுசார் கழகத் தலைவர் சாம்பிட்ரோடா, ‘இப்பல்கலைக் கழகங்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு துறைகளின் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க  ‘ஆம்புட்ஸ்மேன்’ அமைப்பு தேவை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us