தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளிகள் மீது பெற்றோர் புகார்

அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளிகள் மீது பெற்றோர் புகார்

அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளிகள் மீது பெற்றோர் புகார்


UPDATED : அக் 19, 2011 12:00 AM

ADDED : அக் 19, 2011 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2011 12:00 AM ADDED : அக் 19, 2011 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகளுக்கு தற்போது கட்டணம் நிர்ணயிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பெற்றோர்கள் நீதிபதி சிங்காரவேலுவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அழகப்பா பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். கூடுதல் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை மண்டல அளவில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. எனவே அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சிங்கரவேலுவிடம் தெரிவித்தோம். அவரஅந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் என புகார் அளித்து திரும்பிய பெற்றோர்கள் கூறினர்.

அதிகக் கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகங்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளோம். அதை பொருட்படுத்தாமல் சில பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர். அப்படிப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அருமைநாதன் கூறியுள்ளார்.

எந்த பள்ளியாக இருந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரங்கிமலையில் ஒரு தனியார் பள்ளி வசூலித்த சுமார் 10 லட்ச ரூபாயை மாணவர்களிடம் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி சிங்காரவேலு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us