UPDATED : அக் 20, 2011 12:00 AM
ADDED : அக் 20, 2011 10:51 AM
மென்பொருள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகுக்கிறது. வெளிநாட்டு ஐ.டி., நிறுவனங்கள், உள்நாட்டு ஐ.டி., நிறுவனங்கள் என இந்தியாவில் ஐ.டி., நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இந்நிலையில் ஐ.டி., நிறுவனங்களில் சிறந்தது எது என்ற கருத்து கணிப்பை Dataquest Cyber Media Research நிறுவனம் நடத்தியுள்ளது.
இந்த கருத்துகணிப்புக்கு இந்திய அளவில் மொத்தம் 200 ஐ.டி., நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 3,337 ஊழியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக எச்.சி.எல்., நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை தவிர்த்து ஊழியர்களின் கனவு நிறுவனங்கள் பட்டியலில் "இன்போசிஸ்' முதலிடத்தை பெற்றுள்ளது. ஊழியர்களை திருப்திபடுத்தும் நிறுவனங்கள் பட்டியலில் "கேப்ஜெமினி இந்தியா' முதலிடத்தை பெற்றுள்ளது.
"டாப் 10" ஐ.டி., நிறுவனங்கள்
1. எச்.சி.எல்.,
2. ரோல்டா இந்தியா
3. ஐகேட் பட்னி
4. சேப் லேப்ஸ் இந்தியா
5. டவன்ட் டெக்னாலஜி
6. மகிந்த்ரா சத்யம்
7. துலிப் டெலிகாம்
8. கேப்ஜெமினி இந்தியா
9. விர்ச்சுசா இந்தியா
10. நகாரோ சாப்ட்வேர்
"டாப் 10" கனவு ஐ.டி., நிறுவனங்கள்
1. இன்போசிஸ்
2. டி.சி.எஸ்.,
3. ஐ.பி.எம்., இந்தியா
4. மைக்ரோசாப்ட் இந்தியா
5. எச்.சி.எல்., இன்போசிஸ்டம்
6. ரோல்டா இந்தியா
7. சேப் இந்தியா
8. ஐகேட் பட்னி
9. அசெஞ்சர்
10. ஆரக்கல்
