UPDATED : அக் 20, 2011 12:00 AM
ADDED : அக் 20, 2011 11:29 AM
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உள்ள அனாடமி, பிசியாலஜி, பையோகெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவிலும் தலா 50 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி வழங்கப்படும் என்ற புதிய முறையை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்ததை அடுத்து, அவர்களில் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடர்ந்தனர். மதுரைக் கிளை நீதிமன்றத்தில், நடந்த வழக்கு விசாரணையில், எம்.ஜி.ஆர். பல்கலை. நடைமுறைப்படுத்திய புதிய தேர்வு முறைக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களையும் இரண்டாமாண்டு வகுப்பில் சேர்த்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையில், புதிய தேர்வு முறை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதாக இருக்கும் என்று பதில் மனு தாக்கல் செய்தது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது, நீதிபதி, இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டார்.
