UPDATED : அக் 23, 2011 12:00 AM
ADDED : அக் 23, 2011 11:06 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனூர் புனித லூர்தன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. மாணவர் ஆனந்த் வரவேற்றார். தலைமை ஆசிரியர் அந்தோணி சகாயம் தலைமை தாங்கினார்.
சிறப்பு
விருந்தினராக சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கலிய பெருமாள், இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஓவிய ஆசிரியர் சிவநேசன் தமிழ் மொழி மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சிறப்பை எடுத்துக் கூறினார். 9ம் வகுப்பு மாணவர்கள் கில்பர்ட்ராஜ், அற்புதராஜ் ஆகியோர் திருக்குறள் விளக்கம் அளித்தனர். 8ம் வகுப்பு மாணவர்கள் முரளிதரன், ராஜேஷ்குமார் "பாமரனும்- புலவனும் ஓர் இனிய சந்திப்பு" என்ற தலைப்பில் நடித்துக் காட்டினர்.அரவிந்த்
"இன்பத்தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பாரதியின் தமிழ்ப்பற்று என்ற தலைப்பில் 9ம் வகுப்பு மாணவர் ராஜேந்திரன் உரையாற்றினார். மாணவர் தினகரன் நன்றி கூறினார்.