UPDATED : அக் 23, 2011 12:00 AM
ADDED : அக் 23, 2011 11:06 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாய்ராம் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்திய ரெட்கிராஸ் சங்க புதுச்சேரி கிளையும், சாய்ராம் கல்லூரியும் இணைந்து ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
முகாமை
சங்கத் தலைவர் டாக்டர் கோபால் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். சாய்ராம் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர். இந்தியன் ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் பிரகாஷ், இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர் ராதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் அருள் விசாகம் நன்றி கூறினார்.