தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ள ஒரு பள்ளி

தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ள ஒரு பள்ளி

தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ள ஒரு பள்ளி


UPDATED : அக் 27, 2011 12:00 AM

ADDED : அக் 27, 2011 10:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2011 12:00 AM ADDED : அக் 27, 2011 10:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி : ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ள நகராட்சி பள்ளியில், விடுமுறையில் சென்றதால் மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்; பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்காலிகமாக இரு ஆசிரியர்களை நியமித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 45 மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தலைமையாசிரியர் மட்டுமே பணியாற்றி அனைத்து குழந்தைகளுக்கும் பாடங்களை நடத்தி வந்தார். கடந்த 3 மாதங்களாக பள்ளியில் மற்ற வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டது.

இதனால், 7 மாணவர்களை பெற்றோர் வேறு பள்ளிகளில் சேர்த்தனர். சில நேரங்களில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவியரை வைத்து பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், பள்ளி தலைமையாசிரியருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தீபாவளிக்கு முந்தைய தினம் விடுப்பு எடுத்தார். இதனால், காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மாணவ, மாணவியர் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி, அனைவரும் டிசி வாங்கிச் செல்வதாக தீர்மானித்து பள்ளி வளாகம் முன் கூடினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து கல்விக்குழு தலைவர் ஏ.மணி, துணைத் தலைவர் டி.மணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சியாமளா தேவி, துணைத் தலைவர் கணேஷ், முன்னாள் தலைவர் மூட்லி, மகளிர் குழு வார்டு தலைவர் ஹேமலதா மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடனடியாக இரு ஆசிரியர்களை நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் வராததால் பள்ளி மாணவ, மாணவியர் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்பு வேறு பள்ளிகளில் இருந்து இரு ஆசிரியர்களை வரவழைத்து பாடங்களை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், மாணவ, மாணவியர் போராட்டத்தை கைவிட்டு மதியம் வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்; மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில் இரு ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து இருக்க வேண்டும்" என கல்விக் குழுவினரும், பெற்றோரும், பொது மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us