தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு

ஏழை மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு

ஏழை மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு


UPDATED : அக் 27, 2011 12:00 AM

ADDED : அக் 27, 2011 02:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2011 12:00 AM ADDED : அக் 27, 2011 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், மேல்நிலை பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வுக் கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் கருவூலத்தில் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ரூ.300ஐ கருவூலத்தில் செலுத்தியமைக்கான அசல் கருவூல சலான், தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் பட்டியல், தேர்வுக் கட்டண விலக்குக்கு தகுதியானோர் பட்டியல் இனவாரியாக தட்டச்சு செய்த மூன்று நகல்களை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் சார்ந்த பிற்சேர்க்கை படிவம் இரண்டு நகல்கள் ஆகியவற்றை நவம்பர் 1ம் தேதி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us