தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லையில் வரைதல், வண்ணம் தீட்டுதல் போட்டி

நெல்லையில் வரைதல், வண்ணம் தீட்டுதல் போட்டி

நெல்லையில் வரைதல், வண்ணம் தீட்டுதல் போட்டி


UPDATED : நவ 08, 2011 12:00 AM

ADDED : நவ 08, 2011 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2011 12:00 AM ADDED : நவ 08, 2011 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான வரைதலும், வண்ணம் தீட்டுதலும் போட்டி வரும் 14ம் தேதி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடக்கிறது.

நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான வரைதலும், வண்ணம் தீட்டுதலும் போட்டி வரும் 14ம்தேதி காலை 9 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடக்கிறது.

இப்போட்டியில் முதல்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்கும் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இயற்கை காட்சி என்ற தலைப்பிலும், 4 முதல் 6ம் வகுப்பு வரை மக்கள் தொகை பெருக்கம் என்ற தலைப்பிலும், 7 முதல் 9ம் வகுப்பு வரை ரத்ததானம் என்ற தலைப்பிலும் 10 முதல் பிளஸ் 2 வரை உலக வெப்பமயமாக்கல் என்ற தலைப்பிலும் வரைதல் மற்றும் வண்ணம் தீட்ட வேண்டும்.

போட்டியின் போது வரைவதற்கு தேவையான வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். இதர உபகரணங்கள் மாணவர்கள் தாங்களே கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாமிரபரணி ரோட்டரி மூலம் பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளியின் மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமோ வரும் 12ம்தேதிக்குள் அரசு அருங்காட்சியகம், செயின்ட் மார்க் தெரு, நெல்லை என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us