தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் ரத்த தானத்துக்கு பதிவு துவங்கியது

கல்லூரிகளில் ரத்த தானத்துக்கு பதிவு துவங்கியது

கல்லூரிகளில் ரத்த தானத்துக்கு பதிவு துவங்கியது


UPDATED : நவ 14, 2011 12:00 AM

ADDED : நவ 14, 2011 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2011 12:00 AM ADDED : நவ 14, 2011 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 100 கல்லூரிகளிலும், இதற்கான படிவங்கள் கொடுக்கப்பட்டு, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும், மாணவர்களைப் பதிவு செய்யும் பணி நடைபெறும்.

விபத்து மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு, ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை செயற்கையாகத் தயாரிக்க முடியாது என்பதால், மற்றவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படுகிறது. எய்ட்ஸ், ஹெபடைடீஸ் பி மஞ்சள் காமாலை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள், ரத்தம் மூலம் பரவுகின்றன என்பதால், தானமாகப் பெறப்படும் ரத்தம், பாதுகாப்பது என உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில், ரத்தக் கொடையாளிகள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், குறிப்பிட்ட ரத்தப் பிரிவு தேவைப்படும் நிலையில், அந்த ரத்தப் பிரிவைக் கொண்ட, கொடையாளியைத் தொடர்பு கொண்டு, ரத்த தானம் பெற முடியும். மேலும், தானம் பெறப்படும் ரத்தத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களை, ரத்த தானம் செய்ய ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள், ரத்த தானம் செய்ய, இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜன், இது குறித்து கூறும்போது, "இத்திட்டத்தின் மூலம், ரத்த தானத்தில் தமிழகம் தன்னிறைவு பெறும்" என்றார்.

கல்லூரிகளில் உள்ள என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மூலம், இதற்கான படிவம் கொடுக்கப்பட்டு, அப்படிவங்கள், இணைய தளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ரத்தம் தேவைப்படும் நிலையில், ரத்த வங்கி அலுவலர், கல்லூரி என்.எஸ்.எஸ்., அலுவலரைத் தொடர்பு கொண்டு, ரத்த தானம் செய்ய தகுதியான மாணவர்களை அனுப்புமாறு கேட்டு, ரத்த தானம் பெற முடியும்.

மேலும், ரத்த தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயரைப் பதிவு செய்யும், இ-ரிஜிஸ்டரி முறை, கடந்த மாதம் ரத்த தான தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த வங்கி அதிகாரி ஒருவர், இதுகுறித்துக் கூறும்போது, "இந்த இ-ரிஜிஸ்டரி மூலம், 50 ஆயிரம் பேரைப் பதிவு செய்ய கனரா வங்கி முன் வந்துள்ளது" என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள 17 மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த, 17 நடமாடும் ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. தானமாகப் பெறப்படும் ரத்தம், இந்த நடமாடும் வங்கிகள் மூலம் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, ரத்த சேமிப்பு நிலையங்கள் மூலம் சேமிக்கப்படும். இதன் மூலம், கிராமப் புறங்களிலும், ரத்த தான முகாம்களை நடத்தி, ரத்த தானம் பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us