தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக அரசின் இலவச சிவில் சர்வீசஸ் தேர்வுப் பயிற்சி

தமிழக அரசின் இலவச சிவில் சர்வீசஸ் தேர்வுப் பயிற்சி

தமிழக அரசின் இலவச சிவில் சர்வீசஸ் தேர்வுப் பயிற்சி


UPDATED : செப் 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாட்டிலிருந்து இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இந்த சிறப்புப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 2008ல் துவங்கி 6 மாத காலம் வரை நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே கலந்து கொண்டிருப்பவர்களும் சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்வு வரை எழுதியிருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.
முழு நேரம் பயிற்சி மையத்திலேயே தங்கிப் படிப்பது, பகுதி நேர மாலை வகுப்புகளில் அங்கே தங்காமலே படிப்பது என 2 வகைகளாக இப்பயிற்சி நடத்தப்படும்.
இப்படி இந்த பயிற்சியானது தங்கிப் படிப்பது தங்காமல் படிப்பது என பிரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எந்தப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பது கீழே தரப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்கள்
தங்கிப் படிப்பது 42, தங்காமல் படிப்பது 21.
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்:
தங்கிப் படிப்பது தலா 6 மற்றும் தங்காமல் படிப்பது தலா 3.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் டீநோட்டிபைட் பிரிவினர்:
தங்கிப் படிப்பது 36 மற்றும் தங்காமல் படிப்பது 18.
பிற சமூகத்தினர்
தங்கிப் படிப்பது 10 மற்றும் தங்காமல் படிப்பது 5.
தாழ்த்தப்பட்டவர்
தங்கிப் படிப்பது 98, தங்காமல் படிப்பது 49.
எஸ்.டி. தங்கிப்படிப்பது 2 மற்றும் தங்காமல் படிப்பது 1.
தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பிறர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கட்டணம்
பொதுப் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும். பிறருக்குக் கட்டணம் இல்லை. எனினும் இவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலிருக்க வேண்டும். அதற்கு மேலிருப்பவர்கள் மாதம் ரூ.800 விடுதிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பகுதி நேரப் பயிற்சியில் சேருவோருக்கு விடுதி வசதி கிடையாது. விருப்பப் பாடத்தில் பயிற்சிக்கு இவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பகுதிநேர வகுப்புகள் மாலை 6.30லிருந்து 8.30வரை மட்டுமே நடத்தப்படும்.
இதற்கும் உண்டு நுழைவுத் தேர்வு
இந்த பயிற்சியில் சேருவதற்கான தகுதியானது பொது நுழைவுத் தேர்வு ஒன்றின் மூலமாக மட்டுமே நடத்தப்படும். இத்தேர்வானது சென்னை, சிதம்பரம், கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுõர் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் நடத்தப்படும். இத் தேர்வானது அப்ஜக்டிவ் கேள்விகளைக் கொண்டிருக்கும். இதில் இந்திய அரசியல், பொருளாதாரம், புவியியல், பொது அறிவியல் மற்றும் நடப்புச் செய்திகள் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும். இத் தேர்வானது நவம்பர் 9, 2008 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
முழு விபரங்களையும், படிவத்தையும் http://www.civilservicecoaching.com  என்னும் இணைய தளத்திலிருந்து பெறலாம். தகுதிகள், கட்டணங்கள், விடுதி வசதி போன்ற அனைத்து விபரங்களையும் இத்தளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.
விண்ணப்பத்துடன் ஜாதி, பட்டப்படிப்பு ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் ரூ.5 அஞ்சல்தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறையையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
Director and Director General of Training Anna Institute of Management, Chennai 600 028.
தொலைபேசி எண்கள்: 044  26211475, 26211909
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: செப்டம்பர் 30, 2008.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us