தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனோன்மணியம் பல்கலை., ஆப்ரிக்க பல்கலையுடன் ஒப்பந்தம்

மனோன்மணியம் பல்கலை., ஆப்ரிக்க பல்கலையுடன் ஒப்பந்தம்

மனோன்மணியம் பல்கலை., ஆப்ரிக்க பல்கலையுடன் ஒப்பந்தம்


UPDATED : செப் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த அனைத்து தேசங்களின் பல்கலைக்கழக கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அனைத்து தேசங்களின் பல்கலைக்கழக கல்லூரி, நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஆகியவை இடையே கல்வி சார்ந்த உறவுகளை நிறுவ, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி முன்னிலையில் செப்., 15ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, பட்டப் படிப்புகளுக்காகவும், மாணவர் பயிற்சிக்காகவும், பாடத் திட்டம் மற்றும் சோதனைக் கூட வளர்ச்சியில் உதவுவது, மாணவர்கள் பரிமாற்றம் செய்துக் கொள்வது, ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்படுவது, அனைத்து தேசிய பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், பட்டயம் மற்றும் பட்டங்களுக்கு மனோன்மணியம் பல்கலை தனது பெயரையும், சின்னத்தையும் கடனாக வழங்குவது, ஆன்-சைட் திட்டங்களை நிறைவேற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்குச் செல்லத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us