நெல்லை அரசு கல்லூரி மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் போராட்டம்
நெல்லை அரசு கல்லூரி மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் போராட்டம்
UPDATED : செப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பி.காம்.,பி.ஏ., பயிலும் மாணவ, மாணவியருக்கு 2006ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனம் மூலம் கம்ப்யூட்டர் வகுப்புகள் கூடுதலாக நடத்தப்பட்டது.
இதற்காக மாணவர்களிடம் இருந்து ஆயிரத்து 250 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை என மாணவர்கள் புகார் கூறினர்.
அண்மையில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை செலுத்தப்பட்ட பணத்தை வாபஸ் தரும்படி கோரிக்கை வைத்து கடந்த 16ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி முதல்வர் அப்துல்ஹனீப் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தார்.
இருப்பினும் 18ம் தேதி காலை முதல் பிற்பகல் வரையிலும் மாணவ, மாணவியர்கள் கொளுத்தும் வெயிலில் கேட்டுக்கு வெளியே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அம்பை தாசில்தார் காதர்அவுலியா, மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாலையில் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.
