தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் வரலாற்று ஆய்வாளர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இளம் வரலாற்று ஆய்வாளர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இளம் வரலாற்று ஆய்வாளர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி


UPDATED : ஜன 24, 2012 12:00 AM

ADDED : ஜன 24, 2012 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2012 12:00 AM ADDED : ஜன 24, 2012 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் என்ற அமைப்பின் ஆதரவு மற்றும் உதவியுடன், சர் தியாகராயா கல்லூரியின் வரலாற்று துறையினரால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி கருத்தரங்கு ஜனவரி 23, 24ம் தேதிகளில், சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயா கல்லூரியில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில், கல்லூரி முதல்வர் சுப்ரமணிய ராஜு தலைமை தாங்க, வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் தென் பிராந்திய மையத்தின் உதவி இயக்குநர் டாக்டர். அருணி உள்ளிட்ட வரலாற்றுத் துறையின் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில், தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்தும் வரலாற்று ஆய்வாளர்கள் கலந்துகொண்டு, இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

வரலாற்று ஆராய்ச்சியின் பரிமாணங்கள், வரலாற்று வரைவியலில் பாலினம், தமிழக வரலாற்றை எழுதுவதில் அரசின் ஆவணங்கள், வரலாற்று மாணவர்களுக்கான திறமைகளை உருவாக்குதல், வரலாற்று ஆய்வுக்கான பத்திரிக்கை மற்றும் அரசியல் இலக்கிய ஆவணங்கள் மற்றும் வரலாற்று ஆய்வில் தமிழகம் சார்ந்த கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளம் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கின் முடிவில், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us