தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலைக் கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல்

இடைநிலைக் கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல்

இடைநிலைக் கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல்


UPDATED : ஜன 27, 2012 12:00 AM

ADDED : ஜன 27, 2012 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2012 12:00 AM ADDED : ஜன 27, 2012 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, எக்ஸ்பிரஸ் ஆர்டர் வழங்கப்படாததால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 9 மற்றும், 10ம் வகுப்பு கல்வித்திறனை மேம்படுத்தவும், உயர்நிலைக் கல்வி, அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச் செய்யவும், மூன்றாண்டுகளுக்கு முன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், தகுதியுள்ள நடுநிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

நடப்பாண்டில், தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 710 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடுநிலைப் பள்ளியாக இருக்கும்போது, ஆசிரியர்களுக்கு அப்பகுதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் சம்பளம் பெறப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை தலைமை ஆசிரியர் மூலமாகவே சம்பளம் பெறப்படுகிறது. தரம் உயர்த்தப்படும்போது, துறை மாற்றப்படுவதால், உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத்தர அப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக, எக்ஸ்பிரஸ் ஆர்டர், அரசால் வெளியிடப்படும்.

இந்த ஆணையை, சம்பந்தப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், கருவூலத்தில் சமர்ப்பித்து, ட்ராயிங் கோடு எண் பெற வேண்டும். அதன்பின், பான் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்த பின்பே ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியும்.

தற்போது, 710 பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு, ஒரு மாதத்துக்கு மேலாகியும், இன்னும் எக்ஸ்பிரஸ் ஆர்டரே வெளியிடப்படாததால், டிசம்பர் மாத சம்பளம், பொங்கல் போனஸ், ஜனவரி மாத சம்பளம் ஆகியவை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us