UPDATED : ஜன 27, 2012 12:00 AM
ADDED : ஜன 27, 2012 11:29 AM
அப்படிப்பின் சில அம்சங்களை தற்போது காணலாம்.
Six Sigma என்பது ஒரு வணிக மேலாண்மை நுணுக்கமாகும். மோட்டரோலாவால்(Motorola) மேம்படுத்தப்பட்டு, தற்போது தொழில்துறையின் பலவித நிலைகளிலும் பயன்படுகிறது. உற்பத்தி மற்றும் வணிக செயல்பாட்டிலுள்ள பிழைகள் மற்றும் குறைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து களைய Six Sigma உதவுகிறது.
புள்ளியியல் முறை உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகையான குவாலிட்டி மேலாண்மை முறைகளை பயன்படுத்தி, நிறுவனத்திற்குள், மக்களின் ஒரு சிறப்பு கட்டமைப்பை உருவாக்குகிறது("Green Belts, Black Belts" etc).
ஒவ்வொரு Six Sigma Project திட்டமும், வரையறுக்கப்பட்ட படிநிலை வரிசையைப் பின்பற்றுகிறது மற்றும் நிதி இலக்குகள்(cost reduction or profit increase) கணக்கிடப்பட்டு, ஒரு நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்படுகிறது.
பயிற்சி படிப்பானது, six sigma&'s DMAIC Methodology ஆகியவைப் பற்றிய தெளிவானப் புரிதலை வழங்குகிறது. வரையறுத்தல், அளவிடுதல், பகுப்பாய்வு செய்தல், மேம்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய செயல்முறைகளை சுருக்கமாக DMAIC என்று அழைக்கிறார்கள். இந்தப் புரோகிராமானது, concepts, assignments, tips, case studies, and exams ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களைப் பற்றி அறிய www.iactglobal.in/sixsigma என்ற இணையதளம் செல்க.
