தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப் பரிசு

தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப் பரிசு

தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரொக்கப் பரிசு


UPDATED : ஜன 28, 2012 12:00 AM

ADDED : ஜன 28, 2012 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2012 12:00 AM ADDED : ஜன 28, 2012 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, முதல்வர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 2011ம் ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே, 25, 20 மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகளையும், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு முறையே 50, 30 மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும், முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மொத்தம், 66 மாணவர்கள் இந்த பரிசுகளை பெற்றனர். வனத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 12 மாணவ, மாணவியருக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆறு பேர், முதல்வரின் சிறப்புப் பரிசுகளை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us