தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கான கணிதத்திறன் போட்டி

பள்ளி மாணவர்களுக்கான கணிதத்திறன் போட்டி

பள்ளி மாணவர்களுக்கான கணிதத்திறன் போட்டி


UPDATED : ஜன 28, 2012 12:00 AM

ADDED : ஜன 28, 2012 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2012 12:00 AM ADDED : ஜன 28, 2012 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், பள்ளி மாணவர்களுக்கான கணிதத்திறன் போட்டியை நடத்துகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், அடுத்த மாதம் 26ம் தேதி, காலை 11 மணி முதல், 12.30 மணி வரை, பள்ளி மாணவர்களுக்கான கணித திறன் போட்டி நடக்கிறது.

இப்போட்டியில் 5, 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு, வகுப்புவாரியாக, ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 044 -2441 0025 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us