தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய செயற்கைகோள்களை தயாரிக்க அண்ணா பல்கலை முடிவு

புதிய செயற்கைகோள்களை தயாரிக்க அண்ணா பல்கலை முடிவு

புதிய செயற்கைகோள்களை தயாரிக்க அண்ணா பல்கலை முடிவு


UPDATED : ஜன 29, 2012 12:00 AM

ADDED : ஜன 29, 2012 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2012 12:00 AM ADDED : ஜன 29, 2012 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: "மேலும் 2 செயற்கைக்கோளை தயாரிக்க, அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது&'&' என, பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் "குருஷேத்திரா" என்ற பெயரில், தொழில்நுட்ப பயிலரங்கம், பிப்., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து, துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில், குருஷேத்திரா தொழில்நுட்ப பயிலரங்கம், பிப்., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில், பிரபல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்த உள்ளனர். இந்த பயிலரங்கம், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த அணுசாட் செயற்கைக்கோள், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, மேலும் 2 செயற்கைக்கோள்களை தயாரிக்க, பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதில், ஒரு செயற்கைக்கோள், நானோ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு, ஒரு செயற்கைக்கோளும், சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு, மற்றொரு செயற்கைக்கோளும் தயாரிக்கப்படும்.

இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us