தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரிவுரையாளர் பணிக்காக 18 ஆயிரம் பேர் எழுதும் ‘செட்’ தேர்வு

விரிவுரையாளர் பணிக்காக 18 ஆயிரம் பேர் எழுதும் ‘செட்’ தேர்வு

விரிவுரையாளர் பணிக்காக 18 ஆயிரம் பேர் எழுதும் ‘செட்’ தேர்வு


UPDATED : செப் 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தேர்வில் பங்கேற்க, 18 ஆயிரத்து 223 விண்ணப்பங்கள் தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இத்தேர்வில் எம்.ஏ., தமிழ் முடித்த இரண்டாயிரத்து 277 பேர் பங்கேற்கின்றனர். கணிதத்தேர்வை எழுத ஆயிரத்து 718 பேரும், வணிகவியல் தேர்வை எழுத ஆயிரத்து 698 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி நடத்தப்படுகிறது.
தேர்வில் தமிழ் பாடத்தைத்தவிர, வரலாறு, உளவியல், சமூகவியல், கல்வியியல், இசை, வணிகவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், மனையியல், பொது நிர்வாகம் ஆகிய பாடங்களையும், தமிழில் எழுதலாம். இத்தேர்வு மூன்று தாள்களாக நடத்தப்படும்.
முதல் தாள் தேர்வு காலை 9.30 மணிக்கு துவங்கும். இத்தேர்வு அனைவருக்கும் பொருந்தும். இரண்டாம் தாள் தேர்வில், குறிப்பிட்ட பாடங்களில் இருந்து ‘ஆப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். மூன்றாம் தாள் தேர்வு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடக்கும். இத்தேர்வில் கேள்விகளுக்கு கட்டுரை வடிவில் பதில் அளிக்க வேண்டும்.
பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, சிதம்பரம், காரைக்குடி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் தேர்வு நடக்கிறது. எந்தெந்த மையங்களில் நடத்தப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us