UPDATED : செப் 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருநெல்வேலி: ஆங்கிலம் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார்(18). இவர் இந்த ஆண்டில் இன்ஜினியரிங் சீட் கிடைத்து நெல்லை மாவட்டம் மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என்.,இன்ஜினியரிங் கல்லூரியில் மரைன் டெக்னாலஜி படிப்பில் சேர்ந்தார்.
பிளஸ் 2 வரை தமிழ் மீடியத்தில் படித்திருந்ததால் வகுப்பில் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களை புரிந்துகொள்வதில் சிரமமாக இருந்துள்ளது. இதுகுறித்து மாணவர்களிடம் குறைபட்டுள்ளார். சில மாணவர்களின் கேலி கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ராம்குமார் செப்., 19ம் தேதி மாலையில் கல்லூரி விட்டு விடுதிக்கு சென்றதும் தனது அறையில் நைலான் கயிற்றில் துõக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மாணவன் இறப்பிற்கு ஆங்கிலம் புரியாததுதான் உண்மையான காரணமா.. வேறு காரணங்கள் உள்ளனவா என்பதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.
