தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் பங்கீடு விவரம் அறிவிப்பு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் பங்கீடு விவரம் அறிவிப்பு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் பங்கீடு விவரம் அறிவிப்பு


UPDATED : செப் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பிளஸ் 2 வேதியியல் பிராக்டிக்கல் தேர்வில் மதிப்பெண் பங்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் பிராக்டிக்கல் தேர்வுக்கு, கடின பகுதிகளை நீக்கி எளிமைப்படுத்தும்படி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று செப்., 5ம் தேதி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வேதியியல் பாடத்தில் தற்போது 10 இரட்டை உப்புகள் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. முதலாண்டில் வண்ண உப்புகளும், இரண்டாம் ஆண்டில் வெள்ளை உப்புகளையும் மட்டும் சோதனையாக வைக்கலாம் என்று அரசு உத்தரவாக வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் உப்புகள்:
இதனடிப்படையில் வேதியியல் பிராக்டிக்கல் தேர்வுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உப்புகள் குறித்து தெரிவித்துள்ளனர். லெட் நைட்ரேட், அலுமினியம் சல்பேட், அலுமினியம் நைட்ரேட், சிங்க் சல்பைடு, சிங்க் சல்பேட், கால்சியம் கார்பனேட், பேரியம் குளோரைடு, மெக்னீசியம் கார்பனேட், மெக்னீசியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் கார்பனேட், அம்மோனியம் சல்பேட் ஆகியவை வழங்கப்படும்.
பருமனறி பகுப்பாய்வில் பொட்டாசியம் பெர்மாங்கனேட், பொட்டாசியம் டைகுளோரைட் என இரண்டு வகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பொட்டாசியம் பெர்மாங்கனேட் மட்டுமே பயன்படுத்தி ஆறு வகையான சோதனைகளில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.
மதிப்பெண் பங்கீடு:
பிராக்டிக்கல் தேர்வுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அகமதிப்பீடு பணிகளான ரெக்கார்டு ஒர்க், பிராக்டிக்கல் வகுப்புக்கான அட்டெண்டன்ஸ் ஆகியவற்றுக்கு தலா 5 மதிப்பெண் வீதம் 10 மதிப்பெண். புராஜெக்ட் ஒர்க்குக்கு 10 மதிப்பெண் என மொத்தம் 20 மதிப்பெண் வழங்கப்படும். மீதியுள்ள 30 மதிப்பெண்களில் பருமனரி பகுப்பாய்வுக்கு 18 மதிப்பெண்ணும், பண்பறி பகுப்பாய்வுக்கு 12 மதிப்பெண்ணுமாகப் பிரித்து வழங்கப்படும்.
பருமனறி பகுப்பாய்விலும் சுருக்கச் செய்முறைக்கு 5 மதிப்பெண். தரம்பார்த்தல் முதல் பிரிவுக்கு 5 மதிப்பெண். தரம்பார்த்தல் இரண்டாவது பிரிவுக்கு 5, மூன்றாவது பிரிவு 1, நான்காவது பிரிவு 1, எடை கணக்கீடுக்கு 1 என மொத்தம் 18 மதிப்பெண் வழங்கப்படும்.
உப்பு பகுப்பாய்வில் முன்னறி சோதனை (கரைதிறன், வெப்ப, சுடர், சாம்பல் சோதனைகளுக்கு) 2 மதிப்பெண். அமிலம் மூலம் பண்பறிதலுக்கு 2 மதிப்பெண், சோடியம் கார்பனேட் சாறு மற்றும் சோதனைக்கு 2 மதிப்பெண், மூலகரைசல் தயாரிப்பு மற்றும் தொகுதி பரிசோதனைக்கு 3 மதிப்பெண் வழங்கப்படும். உறுதிப்படுத்தும் பரிசோதனைக்கு 1 மதிப்பெண், அமிலம் மூலம் சோதனை மற்றும் கரைசல் மூலம் சோதனைக்கு 2 மதிப்பெண் என மொத்தம் 12 மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலர் பிரபாகரன் கூறுகையில், ‘எழுத்துத் தேர்வுக்குப் பின்னரே பிராக்டிக்கல் தேர்வு நடைபெற உள்ளதாகக் கூறப்படுவதையும் தெளிவுபடுத்தினால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதற்கேற்ப தயார்படுத்திக் கொள்ள முடியும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us