தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., இயக்குனர் நியமன வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

ஐ.ஐ.டி., இயக்குனர் நியமன வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

ஐ.ஐ.டி., இயக்குனர் நியமன வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி


UPDATED : செப் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.,யின் இயக்குனராக எம்.எஸ்.ஆனந்த் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் முரளிதரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. 57 வயதுக்கு உட்பட்டவர்களை பதவியில் நியமிக்க முடியும். ஆனால், இரண்டாவது முறை அவரை நியமிக்கும்போது வயது 62. முதலாவது பதவிக்காலம் முடிந்த பின், தொடர்ந்து அதே பதவியை வகித்து வந்தார். இவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஏற்கனவே, இதே நிவாரணம் கோரி சுப்ரீம் கோர்ட்டை மனுதாரர் அணுகியுள்ளார். பின், மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தள்ளுபடி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெறாமல், மீண்டும் இதே பிரச்னைக்காக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us