தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புற்றுநோய் ஆராய்ச்சிக்காக சிங்கப்பூர் செல்லும் ஏழை மாணவிக்கு உதவி

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக சிங்கப்பூர் செல்லும் ஏழை மாணவிக்கு உதவி

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக சிங்கப்பூர் செல்லும் ஏழை மாணவிக்கு உதவி


UPDATED : செப் 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த மாணவி, புற்றுநோய் தொடர்பான திட்ட ஆய்வு தயாரித்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பித்தார். சீனாவில் உள்ள பல்கலையில் தன்னை படிக்க வைக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இவரின் திட்ட ஆய்வை, சீனாவில் உள்ள பல்கலைக்கு அனுப்பி வைத்த போது, புற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள பல்கலையில் வசதியில்லை என பதில் வந்தது. இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலை பேராசிரியர் குப்தாவிடம், மாணவி அருள் ஜோதியின் திட்ட ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.
பின் இந்த ஆய்வை, தேசிய பல்கலை வசம் ஒப்படைத்தார் பேராசிரியர். தற்போது மாணவி அருள் ஜோதியை, ஆராய்ச்சி மாணவியாக தேர்வு செய்துள்ளது சிங்கப்பூர் தேசிய பல்கலை. இவருக்கு மாதம் ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
விமானத்தில் சிங்கப்பூர் சென்று வர, மாணவியின் குடும்பத்தினரிடம் போதிய பண வசதியில்லை. இதையடுத்து பாரதியார் பல்கலை, அந்த மாணவிக்கான முழு பயணச்செலவு மற்றும் பிற செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மாணவிக்கு, யு.ஜி.சி., நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவிக்கான செலவை, இந்த நிதியுதவியில் இருந்து பாரதியார் பல்கலை ஈடுகட்டிக் கொள்ளும்.
இதே துறையைச் சேர்ந்த மாணவர்கள் வசந்த், சரவணக்குமார் ஆகியோர், ஜெர்மனி ரோஸ்டாக் பல்கலையில் அக்., 20 முதல் 26ம் தேதி வரை நடக்கவுள்ள சர்வதேச ‘ஸ்டெம் செல்’ கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.
இக்கருத்தரங்கிற்கு சென்று வர இரு மாணவர்களும் ரூ.3 லட்சம் தேவை என பல்கலை துணைவேந்தரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இரு மாணவர்களுக்கும் ரூ.2.5 லட்சத்தை பல்கலை ஒதுக்கியுள்ளது. இந்த மாணவர்களுக்கு செலவு செய்யப்படும் தொகை, யு.ஜி.சி., அளிக்கும் நிதியுதவியில் இருந்து ஈடுக்கட்டப்படும்.
துணைவேந்தர் திருவாசகம் கூறுகையில், “ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரிடம் திறமை இருக்கிறது. அவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும் விமானத்தில் செல்ல பண வசதியில்லை. இதைக்கருத்தில் கொண்டு பாரதியார் பல்கலை, வெளிநாடு செல்லும் மாணவர்களுக்காக  ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கவுள்ளது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us