UPDATED : செப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.,) உள்ள பி.இ., சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், புரொடக்சன் , பி.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் எம்.இ., ஸ்ரக்சுரல் இன்ஜி., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தேசிய தர நிர்ணயக்குழுவின் (என்.பி.ஏ.,), சான்று பெற விண்ணப்பிக்கப்பட்டது.
இதையடுத்து உ.பி.,யில் உள்ள ரூர்க்கி பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சிங் தலைமையில் 16 பேர் கொண்ட என்.பி.ஏ., குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, கோவை ஜி.சி.டி., கல்லூரியில் செப்., 26ம் தேதி ஆய்வை துவக்கியுள்ளது. கல்லூரி முதல்வர் அண்ணாத்துரை, கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து குழுவிடம் விளக்கினார். பின், மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் ஆகியோரையும் குழு, சந்தித்தது.
இரண்டாம் நாளாக 27ம் தேதியும் ஆசிரியர்கள், மாணவர்களை சந்திக்கும் குழுவினர், கல்லூரியில் உள்ள வசதிகளையும் ஆய்வு செய்கின்றனர்.
