வீட்டிலிருந்தே பணியாற்ற சொல்லும் சிஸ்கோ நிறுவனம்
வீட்டிலிருந்தே பணியாற்ற சொல்லும் சிஸ்கோ நிறுவனம்
UPDATED : செப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்தியாவில் ‘சிஸ்கோ வர்ச்சுவல் ஆபிஸ்‘ என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் வாயிலாக நிறுவன ஊழியர்கள் தங்களது வீடுகளிலிருந்தோ அல்லது தொலைவிலிருந்தோ சிஸ்கோவின் பணிகளை செய்ய முடியும்.
இதற்காக நவீன அலுவலகங்களில் இருப்பது போன்ற கம்ப்யூட்டர் வசதிகள் இவர்களது வீடுகளிலும் ஏற்படுத்தப்படும். ‘பிளக் அண்ட் பிளே‘ முறையிலான இது போன்ற வர்ச்சுவல் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாகத் தரப்படும்.
இப்பணிகளுக்கு அத்தியாவசிமான தேவைகளாகக் கருதப்படும் பாதுகாப்பான அணுகுமுறை, வாய்ஸ்-காலிபர் சொல்யூஷன், ஒயர்லெஸ் மற்றும் வீடியோ சர்வீஸ்கள் இந்தப் பணி முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
பயணச் செலவு, தங்கும் செலவு போன்ற நிறுவன செலவுகளை பெரும்பாலும் குறைத்துவிடும் இந்த முறையை சிஸ்கோ தவிர பல நிறுவனங்களும் கடைப்பிடிக்க விருக்கின்றன என்பதே துறையின் பரபரப்பான தகவலாக இருக்கிறது.
