தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டிஷ் கல்வியை விரும்பும் தென் மாநிலத்தவர்கள்

பிரிட்டிஷ் கல்வியை விரும்பும் தென் மாநிலத்தவர்கள்

பிரிட்டிஷ் கல்வியை விரும்பும் தென் மாநிலத்தவர்கள்


UPDATED : செப் 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் தென் மாநிலங்களில் இருந்து பிரிட்டனில் கல்வி கற்க விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டைவிட 38 சதவீதம் அதிகமான மாணவர்கள் பிரிட்டன் கல்வியை நாடிச் செல்வதை இவை உறுதி செய்கின்றன. கோயம்புத்தூர்,
மங்களூரு, கொச்சின் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களைத் தவிர பிற நகரங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் பிரிட்டன் கல்வி பற்றிய ஆர்வம் அதிகமாகக் காணப்படுவதாக பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த செப்டம்பரில் பிரிட்டனுக்குச் செல்வதற்கான கல்வி விசா 50 சதவீதம் அதிகரிக்கும் என கவுன்சில் எதிர்பார்க்கிறது. பொதுவாக தென்னிந்தியாவில் இருந்து பிரிட்டனுக்குச் செல்ல விரும்புபவர்கள் பட்டமேற்படிப்புக்காக அதிகம் செல்கின்றனர் என்றும் கவுன்சில் கூறியுள்ளது.
பிரிட்டனில் 113 பல்கலைக்கழகங்களும், 600 கல்லூரிகளும் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பைத் தருகின்றன. அதிகமாகக் கிடைக்கும் கல்விக் கடன்களால் வெளிநாட்டுக் கல்வி என்பது எட்டாக் கல்வியாக இப்போது இல்லை என்பதே இந்த அதிகரித்து வரும் நாட்டத்தின் காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us