தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியருக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த ஆய்வு

இந்தியருக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த ஆய்வு

இந்தியருக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்த ஆய்வு


UPDATED : செப் 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாடுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ள பணிகள் பற்றிய விபரங்களை அறியும் விதத்தில் ஒரு ஆய்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு அமைச்சகத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைச் சந்தையின் தேவைகள், திறமையாளர்களின் தேவைகளிலுள்ள நிலை, பணியாளர்களின் இருப்பு ஆகிய அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலமாக இந்தியத் திறமையாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
வளர்த்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியத் தேவைகள், எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலைகள் உள்ளன போன்ற தகவல்களை ஆராய்வதன் மூலமாக பணி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
மேலும் கல்வித் தர நிர்ணயம், சோதித்தல், மூன்றாவது நபர் சான்றிதழ் வழங்கும் முறை, பிராசஸ் ரீ-இன்ஜினியரிங் போன்றவற்றை தரப்படுத்துவதன் மூலமாக திறமையில்லாமல் திருப்பி அனுப்பப்படும் இந்திய ஊழியர் எண்ணிக்கையையும் இந்த ஆய்வின் முடிவுகள் கணிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us