தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விளம்பரம்; கல்விஇயக்குனர் எச்சரிக்கை

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விளம்பரம்; கல்விஇயக்குனர் எச்சரிக்கை

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விளம்பரம்; கல்விஇயக்குனர் எச்சரிக்கை


UPDATED : செப் 29, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த அறிவிப்பை ஆசிரியர் பயிற்சிக் கல்வி இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட மாணவர் சேர்க்கை பட்டியல்களுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது.
தற்போது, அரசின் சிறப்பு அனுமதியின்படி காலியாக உள்ள இடங்களுக்கு சேர்க்கை நடைபெறுவதாக சில கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. இது, என்.சி.டி.இ., விதிமுறைகளை மீறிய செயல்.
இதுபோன்ற விளம்பரங்களைக் கண்டு பொதுமக்களும், மாணவர்களும் ஏமாறக் கூடாது. அதுபோன்று எந்த கல்வி நிறுவனங்களாவது விளம்பரம் செய்தால், அது குறித்து பெற்றோர்கள் ஆசிரியர் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்யலாம்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதோடு, சட்ட ரீதியாக குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us