தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கல்வி இயக்குனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

பள்ளிக்கல்வி இயக்குனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு

பள்ளிக்கல்வி இயக்குனர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு


UPDATED : செப் 29, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்க அரசு வக்கீலுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
தமிழ்நாடு வேலையற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் இணைச் செயலர் அருண்மொழிவர்மன் தாக்கல் செய்த மனு:
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 435 காலியிடங்களை நிரப்புவதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் எத்தனை என்பதும் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் காலியிடம் இல்லை.
மாநில அளவிலான சீனியாரிட்டிபடி, ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
மாநில அளவிலான சீனியாரிட்டிபடி தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரினோம். அதை பள்ளி கல்வித்துறை புறக்கணித்துவிட்டது. மாவட்ட வாரியான சீனியாரிட்டிபடி தேர்வு செய்யவோ, நியமிக்கவோ கூடாது என மனு தாக்கல் செய்து, தடை உத்தரவு பெற்றோம்.
ஐகோர்ட் உத்தரவுக்குப் பின், மாநில அளவிலான சீனியாரிட்டியை பின்பற்றாமல், மாவட்ட அளவிலான சீனியாரிட்டியின்படி பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில், முன் தேதியிட்டு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. தடை உத்தரவை மீறி, சட்டவிரோதமாக காலியிடங்களை நிரப்புகின்றனர். கோர்ட் உத்தரவை மீறிய பள்ளிக் கல்வித் துறை இயக்குனரை தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதி சிவகுமார் விசாரித்தார். இதற்கு பதிலளிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us