ஆன்-லைனில் முதல் மருத்துவ படிப்பு; வழங்குகிறது இக்னோ!
ஆன்-லைனில் முதல் மருத்துவ படிப்பு; வழங்குகிறது இக்னோ!
UPDATED : செப் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ கல்வி நிறுவனத்துடன் (ஐ.ஏ.என்.எம்.,) இணைந்து இந்த டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறியதாவது:
உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரம்பரியமிக்க மருத்துவ முறையான அக்குபஞ்சர் எந்தவித பக்கவிளைகளும் இல்லாதது. அனைத்து விதமான நோய்களுக்கும் இந்த மருத்துவ முறையில் சிகிச்சை உண்டு. குறிப்பாக, தீராத நோய்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை உண்டு.
மற்ற மருத்துவ முறைகளை ஒப்பிடுகையில், அக்குபஞ்சர் முறையில் செலவு மிகவும் குறைவு. இந்த மருத்துவ முறையில் நிபுணத்துவம் öபெறும் அளவிற்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அக்குபஞ்சர் முறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் இந்த படிப்பை அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மாணவர்கள் படிக்கலாம். ஆன்-லைனில் வழங்கப்படும் முதல் மருத்துவ படிப்பு இதுதான்.
‘இன்டேர்னல் அசஸ்மென்ட்’ உட்பட அனைத்து தேர்வுகளும் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறும். எனினும், செய்முறை பயிற்சி, தொடர்பு வகுப்புகளும் நடத்தப்படும். இந்த ஓர் ஆண்டு படிப்பை அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
புதுடில்லி, கொல்கத்தா, இந்தூர், சென்னை, ஹூப்ளி (கர்நாடகா), கோட்டா (ராஜஸ்தான்), ரூர்கெலா (ஒரிசா), திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய எட்டு மையங்களில் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். வரும் நவம்பர் முதல் இந்த படிப்பு துவக்கப்படுகிறது. இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்தார்.
