தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கல்லூரிகளுடன் புரோக்கர்கள் கூட்டு; வெளிமாநில மாணவர்கள் தவிப்பு!

இன்ஜி., கல்லூரிகளுடன் புரோக்கர்கள் கூட்டு; வெளிமாநில மாணவர்கள் தவிப்பு!

இன்ஜி., கல்லூரிகளுடன் புரோக்கர்கள் கூட்டு; வெளிமாநில மாணவர்கள் தவிப்பு!


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்ஜி., படிப்புகளுக்கு நாளுக்கு நாள் ‘மவுசு’ அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் பல இன்ஜி., கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்த வண்ணம் உள்ளன.
சில கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகள் மட்டுமே துவக்கப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்கில் இந்த கல்லூரிகளை, மாணவர்கள் யாரும் தேர்வு செய்யாததால், ஏராளமான சீட்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, காலி சீட்களை, கல்லூரி நிர்வாகமே நிரப்ப முடிவு செய்து, புரோக்கர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரை தேடிக் கண்டுபிடித்து காலி சீட்களை நிரப்புவது புரோக்கர்களின் வேலை. ஒரு மாணவர் அல்லது மாணவிக்கு சீட் வாங்கிக் கொடுக்கும் புரோக்கருக்கு, கல்லூரி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் கொடுக்கிறது.
துவக்கத்தில் மாணவர்கள் விரும்பும் பிரிவில் சீட் காலியாக இருப்பதாகக் கூறும் புரோக்கர்கள், கடைசி நேரத்தில் காலை வாரிவிடும் வேலையை கன கச்சிதமாக செய்துள்ளனர். அட்மிஷன் முடியும் தருவாயில், ‘வேறு பிரிவில் தான் காலியிடம் இருக்கிறது; இஷ்டம் இருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்’ என்கின்றனர். வேறு வழியின்றி, பல மாணவர்கள், தாங்கள் விரும்பிய பிரிவை எடுக்காமல், வேறு பிரிவுகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களிடம் நன்கொடையாக ரூ.40 ஆயிரத்தை வசூலித்துக் கொள்ளும் கல்லூரி நிர்வாகம், இந்த தொகைக்கான ரசீதையும் கொடுத்து விடுகிறது. வகுப்பில் சேர்ந்த பின், மாணவர்கள் படிக்க விருப்பமின்றி, தங்களுடைய பள்ளி மாற்று சான்றிதழை (டி.சி.,) கேட்டால், நான்கு ஆண்டுகளுக்குரிய கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே டி.சி., தர முடியும் என கல்லூரி நிர்வாகம் மிரட்டல் விடுப்பதாகவும் மாணவர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை -திருச்சி ரோட்டில் உள்ள ஒரு சுயநிதி கல்லூரி, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஒரு கல்லூரி, அன்னுõர் அருகேயுள்ள ஒரு கல்லூரி என, கோவை மாவட்டத்தில் உள்ள பல சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், புரோக்கர்களுடன் கூட்டு சேர்ந்து ‘சீட் வியாபாரம்’ செய்கின்றன. இந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது, எந்த பெற்றோரும் இதுவரை புகார் கொடுக்க முன்வனரவில்லை என்பது தான் வேதனை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us