தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நேரத்தில் பிற பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பள்ளி நேரத்தில் பிற பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பள்ளி நேரத்தில் பிற பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
பள்ளி நேரத்தில் அதிகாரிகள் அனுமதியின்றி பிறபணிகளில் ஈடுபடக் கூடாது என்று, ஆசிரியர்களுக்கு துவக்கக் கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துவக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் பள்ளி நேரங்களில் தங்கள் பணிதொடர்பாக கல்வி அலுவலகங்களுக்கு செல்வர். இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு இரு மாதங்களாக புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையிலும் உதவி துவக்கக் கல்வி அலுவலர்கள் மூலம், ஆசிரியர்களின் குறைகேட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன. இரண்டாவது வாரம் மாவட்ட கல்வி அலுவலகத்திலும், மூன்றாவது வாரம் இயக்குனர் அலுவலகத்திலும் குறைதீர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிலையிலும் சில ஆசிரியர்கள் பணி நேரத்தில் உதவி துவக்கக் கல்வி அலுவலகங்கள், வட்டார வளமையங்கள், குறுமையங்களில் மாற்றுப் பணி என்று கூறி அனுமதியின்றி சென்று வருகின்றனர். இதையடுத்து துவக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் துவக்கக் கல்வி அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பள்ளி நடைமுறை நேரத்தில் எந்தக்காரணம் கொண்டும் கல்விப் பணி பாதிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயங்களில் மாற்றுப் பணியில் செல்ல அலுவலர்களின் அனுமதி பெற வேண்டும். கல்விப் பணி தவிர்த்து பிறபணிகளை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பான விதிமீறல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us