தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியின் முகவரிக்கு ஆங்கில ‘சீல்’; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளியின் முகவரிக்கு ஆங்கில ‘சீல்’; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளியின் முகவரிக்கு ஆங்கில ‘சீல்’; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பழநி:
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தும் பள்ளிக்கூட சீல், ஆங்கிலத்தில் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தொடக்க கல்வித்துறையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச புத்தகங்களை, இக்கல்வியாண்டில் தர இயலவில்லை. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குத் தேவையான புத்தக விவரத்தை சரியாக தராததும் ஒரு காரணம் என தெரிய வந்தது.
இந்நிலை, வரும் கல்வியாண்டிலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தலைமை ஆசிரியர்களிடம் இலவச புத்தக தேவைப் பட்டியலை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது  இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறியீட்டு எண் தரப்பட்டுள்ளது.
ஒன்பது இலக்கம் கொண்ட இந்த குறியீட்டு எண்ணில், முதல் இரண்டு இலக்கம் மாவட்டத்தையும், அடுத்த இரண்டு இலக்கம் ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சியையும், அடுத்த  இரண்டு  இலக்கம் நிர்வாகத்தையும், அடுத்த மூன்று இலக்கம் பள்ளிக்கான எண்ணையும் குறிக்கும்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் தேவைப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை தலைமை ஆசிரியர், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் தர வேண்டும். இவ்வாறு தரும்போது, பள்ளி குறியீட்டு எண்ணை குறித்து, அதன்பின் தேவை விவரத்தை குறிக்க வேண்டும்.
வழக்கமாக பட்டியல் தரும் போது, தமிழில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி கொண்ட சீல் பயன்படுத்தப்படும். தற்போது, தேவை பட்டியலில் பள்ளி பெயர் மற்றும் முகவரியை ஆங்கிலத்திலான சீலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறியீட்டு எண் விவரம், கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் தமிழ் அச்சை பயன்படுத்தும் போது, இயக்குனரகத்தில் விவரம் சரிபார்ப்பு குழப்பம் ஏற்படும். எனவேதான், ஆங்கிலத்தில் அச்சு பதிக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us