தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம்; மசோதா தயாரிப்பு தீவிரம்

சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம்; மசோதா தயாரிப்பு தீவிரம்

சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம்; மசோதா தயாரிப்பு தீவிரம்


UPDATED : செப் 30, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான சட்ட மசோதா, வருகிற பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் செம்மஞ்சேரி என்ற இடத்தில் கடல்சார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஒப்புதலை, கடந்த மாதம் மத்திய அமைச்சரவை அளித்தது. செம்மஞ்சேரியில் 300 ஏக்கர் நிலம் வரை கையகப்படுத்தப்பட்டு, அங்கு இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது. இதன் கிளைகள் மும்பை, கோல்கட்டா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.
சென்னையில் கடல்சார் அறிவியல் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவு, கடந்த 2006ம் ஆண்டே எடுக்கப்பட்டது. அப்போது, இந்த பல்கலைக்கழகத்தை மும்பையில் தான் அமைக்க வேண்டுமென்று சரத் பவார் பிரச்னை கிளப்பினார். அதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.
அதன் பிறகு, நிலம் கையகப்படுத்துவது சிரமம் என்ற காரணத்தால், சரத் பவார் தனது கோரிக்கையை தீவிரப்படுத்தவில்லை. 2007ம் ஆண்டு மார்ச்சில் இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது, மத்திய அமைச்சரையே பார்லிமென்டிலேயே இடதுசாரி எம்.பி.,க்கள் தாக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட அமளியின் காரணமாக மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
சீத்தாராம் யெச்சூரியின் தலைமையிலான நிலைக்குழுவோ, இந்த பல்கலைக்கழகத்தைப் போன்றே மும்பை, கோல்கட்டா, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய எல்லா ஊர்களிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஆய்வு செய்த மத்திய அரசு, இத்தனை இடங்களிலும் பல்கலைக்கழகம் அமைப்பதில் நிதி பிரச்னை, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல சிரமங்கள் இருப்பதாகவும், நிறைய ஊர்களில் ஒரே மாதிரி பல்கலைக்கழகங்கள் இருந்தால் மதிப்பிருக்காது என்று கருதியும், முதற்கட்டமாக சென்னையில் மட்டும் அமைத்துக் கொண்டு படிப்படியாக மற்ற இடங்களில் அமைக்கலாம் என்று முடிவு செய்தது.
இதற்கான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, எம்.பி.,க்களின் பார்வைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யும் பணிகள் தீவிரம் பெற்றுள்ளன.
அக்டோபர் 17ம் தேதியன்று கூடவுள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்பதால், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதலில் இந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.352 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில், திட்டச் செலவாக 230 கோடியும், நிர்வாகச் செலவாக ரூ.122 கோடியும் ஒதுக்கப்பட்டது.
தற்போது மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி திட்டச் செலவுக்கு ரூ.244 கோடியும், நிர்வாகச் செலவுக்கு ரூ.122 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us