காலி ஓ.பி.சி., இடங்கள்: சுப்ரீம் கோர்ட் மீண்டும் கருத்து
காலி ஓ.பி.சி., இடங்கள்: சுப்ரீம் கோர்ட் மீண்டும் கருத்து
UPDATED : செப் 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிலையங்களில் பிற்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லையெனில், அவற்றை பொது பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கும்படி சுப்ரீம் கோர்ட் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நீதிபதிகள் அர்ஜித் பசாயத்,சி.கே.தாக்கர், ரவீந்திரன் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச், காலியாக உள்ள பிற்பட்டோருக்குரிய இடங்களை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருப்பது என்ற மத்திய அரசின் கொள்கையை எப்படி ஏற்பது?
பிற்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருப்பது தேச நலன் கொண்டது அல்ல; பணத்தை விரயம் ஆக்குவதாகும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
