தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வினாத்தாளை ஆன்-லைனில் வழங்க அண்ணா பல்கலை திட்டம்

வினாத்தாளை ஆன்-லைனில் வழங்க அண்ணா பல்கலை திட்டம்

வினாத்தாளை ஆன்-லைனில் வழங்க அண்ணா பல்கலை திட்டம்


UPDATED : அக் 03, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுவரை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 145 கல்லூரிகளுக்கும் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள் தேர்வு நாளுக்கு முன்பே அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறையில், வினாத்தாள் மோசடி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த குறைபாட்டை களையும் வகையில், தேர்வுக்கு சில மணிநேரத்திற்கு முன்பு அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்-லைனில் வினாத்தாள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதனை அந்தந்த கல்லூரிகள் ‘பிரின்ட்’ செய்து மாணவர்களுக்கு வழங்கும். இதற்கு தேவையான பிரின்டர், ஜெராக்ஸ், காகிதங்கள் போன்ற வசதிகளை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், ‘மாணவர்கள் ‘காப்பி’ அடிப்பதை தடுக்க, தேர்வு அறையில் அருகிலுள்ள மாணவர்களுக்கு வெவ்வேறு வினாத்தாள்களை அளிக்கும் வகையில், மூன்று விதமான வினாத்தாள்களை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வகுப்புகள் வீடியோ மூலம் பதியப்பட்டு சி.டி.,யாக தயாரித்து, கல்லூரிகளுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது. பல்கலையில் நடந்து வரும் ரூ.5 கோடி மதிப்பிலான நுண்ணிய செயற்கைக்கோளை தயாரிக்கும் பணி டிசம்பரில் நிறைவடையும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us