தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதரசாக்களின் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு ரூ.325 கோடி ஒதுக்கீடு!

மதரசாக்களின் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு ரூ.325 கோடி ஒதுக்கீடு!

மதரசாக்களின் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு ரூ.325 கோடி ஒதுக்கீடு!


UPDATED : அக் 03, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதரசாக்களில் கல்வி தரத்தை உயர்த்த ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் தாஸ்முன்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி பிகார், ஜார்கண்ட், ஒரிசா, குஜராத், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகம், சட்டிஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் பல்கலைக்கழகம், உத்தரகாண்டில் உள்ள கர்வால் பல்கலைக்கழகம், கோவா பல்கலைக்கழகம் ஆகியவை மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
இதுகுறித்த மசோதா பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தாஸ்முன்சி தெரிவித்துள்ளார்.
மேலும், மதரசாக்களில் பத்தாம் வகுப்பு வரை அறிவியல், கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம், மொழிப்பாடம் ஆகியவற்றின் கல்வித் தரத்தை உயர்த்த ரூ.325 கோடி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us