25 லட்சம் பேருக்கு சுற்றுலா படிப்பு: இக்னோ திட்டம்
25 லட்சம் பேருக்கு சுற்றுலா படிப்பு: இக்னோ திட்டம்
UPDATED : அக் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதன் மூலமாக டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிடி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்களை தயார்படுத்தும் முயற்சிகளை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
டூரிசம் துறையில் பல்வேறு படிப்புகளை வழங்கும் இக்னோ உலகிலேயே முதன் முறையாக இத்துறையில் படிப்புகளை தொலைநிலை முறையில் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது துவங்கப்பட்டுள்ள டூரிசம் பள்ளியின் மூலமாக டிப்ளமோ, இளங்கலை, முதுநிலை, எம்.பில்., பி.எச்டி., பிரிவுகளில் புதிய படிப்புகளைப் படிக்க முடியும்.
இக்னோவுக்கென்றே பொதுவாக இருக்கும் புதுமைகளையும் இந்த படிப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளை ஆன்லைன், நேரடி வகுப்பு, தொலைதூர வகுப்பு என்ற 3 முறைகளையும் ஒருங்கிணைத்து நடத்த இக்னோ முடிவு செய்துள்ளது.
இக்னோ சமீபத்தில் நேஷனல் கவுன்சில் பார் ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளை வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
இது மத்திய அமைச்சகத்தின் டூரிசம் துறையுடன் இணைப்புப் பெற்றுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இத்துறையில் இக்னோ தான் படிப்புகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிடி என்னும் துறைகளை மையப்படுத்தி படிப்பைத் தரவுள்ளது. இவை தவிர இவற்றுடன் கலினரி, ஹவுஸ்கீப்பிங், டிராவலிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஹேண்டிகிராப்ட்ஸ் ஆகிய உப பிரிவுகளும் பாடங்களாகத் தரப்படவுள்ளன.
கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் கலாசார ரீதியிலான டூரிசம் படிப்புகள் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் இயங்கும் என இக்னோ தெரிவித்துள்ளது. இப்படிப்பின் சிறப்பம்சங்கள் என இக்னோ பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளது.
- பாடங்களையும் செயல் முறையையும் மிக அழகாக ஒருங்கிணைக்கும் பாடப் பகுதிகள்
- பெருமளவு இருக்கும் மனித வளத்தை செம்மையாக்கி, சீராக்கி இத்துறையில் புதியவர் மற்றும் ஏற்கனவே பணி புரிவோர் ஆகியோரை தயார்படுத்த முடியும்.
- இத்துறைப் படிப்புகள் இந்திய கலாசாரத்தையும், இந்தியாவையும் மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன.
- இந்த படிப்புகள் இலகுத் தன்மையுடையவை. இடம், தட்பவெப்பம் போன்ற இந்தியாவின் மாறுபட்ட அனைத்து அம்சங்களும் பாட வடிவமைப்பில் கவனம் செலுத்தப் பட்டுள்ளன.
இத்துறைப் படிப்புகளை ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம் துறை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதை காலம் சொல்லும்.
